நம்மை சூழ்ந்துள்ள எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட
திடீர் உடல் நிலை கோளாறுகள்,திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள் ,செய்வினை கோளாறுகள்,மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர், பேய் அல்லது ஆவிகள் அல்லது துர்ஆத்மாவினால் பயம் ,சோம்பேறித்தனம்,என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலை நேரம் தவறுதல் மற்றும் வேகமின்மை,தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள், கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள்,மன அழுத்தம்
மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த உப்பு நீர் பரிகார முறையை பின்பற்ற அனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும் செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.
தேவையானவை:
1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக் சால்ட் (உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100% பயனும், இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும் தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)
1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக் சால்ட் (உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100% பயனும், இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும் தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)
பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட் ராக் சால்ட் போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள இரண்டு கால்களையும் தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும் பொழுது மனதிற்குள் ‘உங்கள் உடம்பில் மன்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள் வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால், சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும், சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும் உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த எதிர்மறை கரும் சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும். இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க, நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.
தகவல் பகிர்வர்: வாமணன் சேஷாத்ரி
No comments:
Post a Comment