Monday, 30 June 2014

மின்சாரத்தைலம்!!!

பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே தைலம்.!!!(மின்சாரத்தைலம்)
நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
புதினா உப்பு
ஓம உப்பு
கட்டி கற்பூரம் (THYMOL + MENTHOL + CAMPHOR)
இம்மூன்றையும் சம அளவு வாங்கிக்கொள்ளவும். சுமார் 20கி வாங்கிக்கொள்ளலாம். அது அவரவர் விருப்பம்.
சரி இதை காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு அல்லது கண்ணாடி பாட்டிலில் போட்டு குலுக்க வேண்டும்.
இரண்டு மூன்று நிமிடங்கள் குலுக்கிய உடன் அது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறிவிடும்.
இப்பொழுது தைலம் தயார்.
இது மிகவும் வீரியமான தைலம்.
உடலில் எங்கெல்லாம் வலி உள்ளதோ அங்கெல்லாம் ஓரிரு சொட்டுகள் மட்டுமே தேய்க்கவேண்டும். முழங்கை, மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும்.
இதனுடைய பலன் இத்துடன் நின்றுவிட வில்லை. நீங்கள் பயன் படுத்தும் பல்பொடி மற்றும் பேஸ்ட் எதுவானாலும் அதில் சுமார் பத்து சொட்டுகள் விட்டால் போதும். ஆயுளுக்கும் பல் சம்பந்தமான பிரச்சனை கிட்ட வராது.
பல்லரணை , பற்குத்து , ஈறு வீக்கம் ,ஈறுகளில் சீழ் வடிதல் , வாய் துர் நாற்றம் போன்றவை அணுகவே அணுகாது .இருந்தால் தைலத்தை உபயோகிக்க ஓரிரு நாட்களில் பறந்தோடும்.
இதை 100 மிலி தேங்காய் எண்ணெயுடன் 15 சொட்டுக்கள் கலந்து பயன்படுத்த சாந்தமாக வேலை செய்யும்.சளி , இளைப்பிருமல் , ஆஸ்துமா போன்றவற்றிற்கு வெளிப்பிரயோகமாக தேய்த்துவிட நல்ல பலனளிக்கும். உள்ளே உறைந்திருக்கும் சளி இளகி தொல்லையில்லாமல் வெளியேறும்.
கோமா நிலையில் இருப்பவர்களுக்கு தைலத்தை பொட்டுக்கள் , பிடரி மற்றும் தலைக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கிய இரத்த நாளங்களின் மேல் ஒரிரு சொட்டுக்கள் விட்டு தேய்க்க விரைவில் விழித்தெழுவார்கள்.
சுரம் உள்ளவர்கள் காபி, டீ போன்ற வற்றில் மூன்று சொட்டுகள் விட்டு குடிக்க அடுத்த ஐந்து நிமிடங்களில் சுரம் பறந்தோடும்.
இந்த தைலம் கண்களுக்கு அதிக எரிச்சலை ஊட்ட வல்லது .எனவே கண்களுக்கு நெருக்கமாக இதை உபயோகிக்க வேண்டாம்.கண்ணில் பட்டுவிட்டாலோ அல்லது மின்சாரத் தைலம் தடவிய பின் கண்களில் கையை வைத்துவிட்டாலோ கடும் எரிச்சல் உண்டாகும் அப்போது குளிர்ந்த நீரில் எரிச்சல் தணியும் வரை கண்களைக் கழுவவும்.
.


Baskar Jayaraman's photo.
Baskar Jayaraman's photo.

Home Remedies!!!

Natural home remedies to Increase Sperm Count:
Natural home remedies to Increase Sperm Count:Remedies

Nuts are actually full of essential nutrition as well as minerals that is necessary for semen health and to improve sperm fertility. Nuts include wholesome fat and also omega 3 essential fatty acids that are really good for your lovemaking wellness. The best nuts and seeds to eat are almonds, pistachio’s, cashew’s, and pumpkin seeds. To use these seeds and nuts as a home remedy to improve sperm count, put them all in a bowl together and eat a half a bowl every day.


==> http://askveda.in/- Ayurveda health-tips, home remedies & expert advice

Tips!!!



Homeo Tips

CLINICAL TIPS: "ALOES 6th dilution is reported to have cured falling of the hair. Dr. Ruddock"


CLINICAL TIPS: "ALOES 6th dilution is reported to have cured falling of the hair. Dr. Ruddock"

Saturday, 21 June 2014

பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!!!(Herbal Garden)


இயற்கை முறையில் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வரும்சிவகங்கை மாவட்டம், ஆவுடப் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் சொக்கலிங்கத்தின் நாற்பது ஏக்கர் மூலிகைப் பண்ணையில்இயற்கையில் பல மூலிகைகள் முளைந்திருந்தன. அது போக, மருத்துவத்திற்குத் தேவையான பல மூலிகைகளைத் தேடித்தேடி வாங்கிட்டு வந்து வளர்த்திருக்கிறார் சொக்கலிங்கம். விஷத்திலேயே கொடிய விஷமான எட்டி, ஒத்தத் தலைவலியைக் குணப்படுத்தும் காஞ்சொறி, ஆஸ்துமாவை அழிக்கும் ஆஸ்துமா கொடி, சர்க்கரை நோயை குணப்படுத்தும் சர்க்கரைக் கொல்லி, இன்சுலின் செடிகளும் இங்கே இருக்கிறது. இந்த இன்சுலின் நாற்றுகளை நிறைய பண்ணைகளில் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என்று விற்கிறார்கள். ஒரு செடியை வாங்கிக் கொண்டு வந்து அது வளர்ந்ததும் தண்டை ஒடித்து வைத்தாலே போதும், தன்னால் வளர்ந்துவிடும்.
அதேமாதிரி .. பிரம்பு, கருப்பு வெத்திலை, கருநெல்லி, கருநொச்சி, ரசவாதத்திற்குப் பயன்படும் செங்குமரி, வெள்ளை நாவல், திருவோடு மரம், பேய்கரும்பு, வல்லாரை, ஓரிதழ் தாமரை, முடக்காத்தான், ரணகள்ளி, நீர் நொச்சி, நீர் பிரம்மி, நீல மிளகாய், தவசி, முருங்கை, மான் செவி, கேசவர்த்தினி, கரிசலாங்கன்னி, தண்ணீர் விட்டான் கிழங்கு, ஆகாயகருடன், மதனகாமப்பூ, ஈஸ்வர மூலிகை என்று வகை வகையான அறிய மூலிகைகளையும் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து வளர்க்கிறேன் என்றார்.     

கனகாம்பரத்தில் பச்சை கலரில் பூ வரும் செடி, இரண்டு வகை வல்லாரை, இரண்டு வகை மருதாணி, மூன்று வகை பொன்னாங்கன்னி, ஐந்து வகை வில்வம், ஐந்து வகை பிரண்டை, மூன்று வகை நாரத்தை, ஐந்து வகை எலுமிச்சை என்று ஒரே செடியில் இருக்கும் பல வகைகளும் இங்கே இருக்கிறது. இருமல் உள்ளிட்ட நிறைய நோய்களை குணப்படுத்தும் சித்தரத்தை மட்டுமே தனியாக அரை ஏக்கரில் இருக்கிறது.
மொத்தமாக பார்த்தால்.. ஏறத்தாழ ஐநூறுக்கும் மேற்பட்ட மூலிகைகள் இங்கே இருக்கு. இந்த மூலிகைகளை வைத்து ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, புற்றுநோய், தோல் நோய் என்று ஆங்கில மருத்துவத்திற்கு சவால் விடும் எல்லா நோய்களையும் முழுவதுமாக குணப்படுத்த முடியும். இங்கிருக்கும் எந்தச்செடிக்கும் எந்த ஊட்டமும் கொடுப்பதில்லை. தன்னாலேயே வளர்கிறது. மூலிகையயோட குணமே அதுதான். காட்டில் உரம் போட்டா வளர்க்கிறார்கள் என்றார் சொக்கலிங்கம்.
பாம்பும் கீரியும் சண்டை போடும் போது, கீரி ஒரு இலையைச் சாப்பிடும். அதற்குப் பேர் கீரி புரண்டான் செடி, அது வேற ஒன்றும் கிடையாது. நம்ம காலடியில் கிடக்கும் சாதாரண சுண்ணாம்புக் கீரைதான். பொதுவாக, நாம செம்பருத்தி என்று சொல்லும் செடி அது கிடையாது. அதை ‘செம்பரத்தைப்பூ’ என்று சொல்லணும். செம்பருத்தி என்பது நாட்டுப்பருத்தியில் சிவப்பு கலரில் பூக்கும் ஒரு ரகம்’ என்றபடியே அந்தச் செடியைக் காண்பித்தார் சொக்கலிங்கம். எளிய மருத்துவக் குறிப்பு ஒன்றையும் சொன்னார்.
‘பல் சொத்தை, பல்லில் புழு என்று பல்டாக்டரிம் போய் ஐநூறு, ஆயிரம் என்று செலவழிப்பாங்க. அதற்கு ஒரு சுலபமான வைத்திய முறை இருக்கு. தும்பை இலைகளை ஒரு கைப்பிடி எடுத்துக்கிட்டு, நான்கைந்து சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வாயில் மென்று குதப்பி துப்பினால்… எல்லாம் சரியாயிடும்.
நிறைவாக, என்னோட மூலிகைத் தோட்டத்தை பார்க்கணும் என்று ஆசைப்படுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.
தொடர்புக்கு,
சொக்கலிங்கம், செல்போன் : 94439 – 19801.

புற்று நோயை போக்கும் மந்திரம்!!!

புற்று நோயை போக்கும் மந்திரம்
புற்று நோயை போக்கும் மந்திரம்காஞ்சி மஹா பெரியவா இந்த மந்திரத்தை அருளியுள்ளார்.கீழ் குறிப்பிட்டுள்ள இந்த மந்திரத்தை 45 நாட்களுக்கு 108 முறை பாராயணம் செய்வதன் மூலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்திருப்பதாக ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்கள் கூறியுள்ளார்.
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ
நம்பிக்கையுடன் முயற்ச்சித்துதான் பாருங்களேன்…


புற்று நோயை போக்கும் மந்திரம்

புற்று நோயை போக்கும் மந்திரம்காஞ்சி மஹா பெரியவா இந்த மந்திரத்தை அருளியுள்ளார்.கீழ் குறிப்பிட்டுள்ள இந்த மந்திரத்தை 45 நாட்களுக்கு 108 முறை பாராயணம் செய்வதன் மூலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்திருப்பதாக ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்கள் கூறியுள்ளார்.

அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ

நம்பிக்கையுடன் முயற்ச்சித்துதான் பாருங்களேன்…

எதிர்மறை சக்தி--விரட்ட!!!

நம்மை சூழ்ந்துள்ள எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட
திடீர் உடல் நிலை கோளாறுகள்,திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள் ,செய்வினை கோளாறுகள்,மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர், பேய் அல்லது ஆவிகள் அல்லது துர்ஆத்மாவினால் பயம் ,சோம்பேறித்தனம்,என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலை நேரம் தவறுதல் மற்றும் வேகமின்மை,தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள், கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள்,மன அழுத்தம்
மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த உப்பு நீர் பரிகார முறையை பின்பற்ற அனைத்து கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும் செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.
தேவையானவை:
1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக் சால்ட் (உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100% பயனும், இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும் தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)
பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட் ராக் சால்ட் போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள இரண்டு கால்களையும் தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும் பொழுது மனதிற்குள் ‘உங்கள் உடம்பில் மன்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள் வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால், சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும், சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும் உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த எதிர்மறை கரும் சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும். இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க, நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.
தகவல் பகிர்வர்: வாமணன் சேஷாத்ரி

Wednesday, 18 June 2014

Flower Medicine!!!

மலர் மருத்துவம் எப்படி தோன்றியது?
பிரபல ஆங்கில மருத்துவரான டாக்டர் எட்வர்ட் பாட்ச் என்பவர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர் . அவர் அலோபதி மருத்துவராக தொழில் புரிந்து வந்தார். ஆனால் அவர், தான் கொடுக்கும் அலோபதி மருந்துகள் நன்மையை விட தீமைகளே அதிகம் விளைவிக்கின்றன என்று அனுபவ ரீதியாக ஆய்ந்து உணர்ந்தார். அத னால் ஹோமியோபதி மருத்துவ முறையால் கவரப்பட்டு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து முறையாக பயின்று ஹோமியோ மருந்துகளை கையாண்டு வெற்றி கண்டார். நோயாளியை முழுமையாகக் குணமாக்குகிறோமென்ற மனமகிழ்ச்சி கொண்டார். இருப்பினும் ஹோமியோபதி முறையை இன்னும் சுலபமாக்க வேண்டுமென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார் .எந்த ஒரு வியாதிக்கும் மூல காரணமே மனம்தான். மனதிலிருந்தே வியாதிகள் உருவாகின்றன என்று ஆய்வின் முடிவில் அறிந்து கொண்டார்.அதனால் மனதைச் சரிப்படுத்தினால் உடல் நோயும் குணமாகிவிடும் என்ற உறுதிபாட்டினால் மனதில் வேலை செய்யக் கூடிய மருந்துகளை ஆராய்ந்தார்.-மலைகள்,காடுகள அலைந்து, அங்குள்ள மலர்களையும்,மூலிகைகளையும் தாமே தின்று பரிசோதித்து உணர்ந்தார்.அதன் பின் அவர் உண்டு பரிசோதித்தவைகளை மற்றவர்களுக்கும் கொடுத்து பரிசோதித்தார்.அந்தவகையில் மனதை ஒழுங்குபடுத்தக் கூடிய 38 வகையான மலர் மருந்துகளை தயாரித்தார்.இம்மலர் மருந்துகளை தனியாகவோ,அல்லது ஹோமியோபதி மருந்துகளுடனோ கொடுத்ததில் சிறப்பாக குணமளித்ததை உணர்ந்தார்.
மலர் மருந்தின் மகத்துவம்
ஹோமியோ மருந்தும் இந்த புதிய மலர் மருந்தும் சேர்த்து பயோ மருந்துகளோடு,இணைத்து மனித சமுதாயத்திற்கு பெரும் தொண்டாற்றுகின்றன. எந்தவித பின்விளைவு இல்லை ,உணவு கட்டுப்பாடும் இல்லை இந்த மருந்துகள் எதுவும் நேரடியாக உடலின நோய்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. நோயாளியின் மனப்போக்கை அல்லது மன இயல்பை அறிந்தே கொடுக்கப்படுகிறது. உதாரணமாக மனத்தளர்ச்சி, பயம், வருத்தம், கோபம், விருப்பு, வெறுப்பு-போன்ற மனரீதியான பலவீனங்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. இதனால் நோயாளியின் வேண்டத்தகாத , விரும்பத்தகாத குணங்குறிகளை நீக்குவதுடன், அந்நோயாளியின் வியாதிகளும் முமையாக நீங்குகின்றன. அவர் மனதிற்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. வாழ்க்கையிலும் நல்லமுறையில் முன்னேறுகிறார்கள்.
மலர் மருந்து தயாரிக்கும் முறை
மருந்து தயாரிப்பிற்கான மலரை டிஸ்டில்ட் வாட்டரில் போட்டு ஒரு பகல் முழுவதும் வெய்யிலில் வைத்திருந்தால் இதில் சூரிய சக்தி ஊடுருவி நோயைக் குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. அதன் பின் அந்நீரை வடிகட்டி-அதில் சமபாகம் சுத்த மது சாரத்தை விட்டு கலக்கி வைத்துக் கொண்டால் இதுவே தாய்த்திரவம் ஆகும். அல்லது இதில் ஒரு பங்கும், 99 பங்கு சுத்த மது சாரத்தை விட்டுக்குலுக்கினால் அது வீரியப்படுத்தப்பட்ட மருந்தாகிறது. இதுவே மனதில் நன்றாக வேலை செய்து உடல் வியாதிகளையும் போக்குகிறது.
எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு இணக்கமான, ஒத்தான மனசு இல்லாவிட்டால் அதுவே மன எழுச்சிகளாகவும்,வெறுக்கத்தக்க குணங்களாகவும் மாறி பல்வேறு குணங்குறிகளை கொண்ட உடல் நோய்கள் உண்டாகிறது.தொடர்ந்து நீண்டகாலமாக இருக்கும் மனக்கவலை, மன வருத்தம், மனப்பயம், கோழைத்தனம், காதல் தோல்வி, வியாபார நஷ்டம், தேர்வில் தோல்வி – முதலியவைகள் சம்மந்தப்பட்டவரின் உயிர்சக்தியை கொஞ்ச கொஞ்சமாக உறிஞ்சி அவரை நோயாளியாக்குகிறது. தொடர்ந்து இவ்வாறு விரும்பத்தகாத குணங்களும், உணர்ச்சிகளும் உடல் இயக்கத்தை கெடுத்து, உடல் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்தைக் கெடுத்துவிடுகிறது.அதன் விளைவாக அவரது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. இதனால் அவ்வப்போது ஜலதோஷம்,மூட்டு வலி,மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம் என இனம் காணமுடியாத நோய்க்குறிகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இவ்வியாதிகள் திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருக்கிறது. உதாரணமாக ஒருவருக்கு ஜலதோசம் பிடித்ததற்கு மருந்து கொடுத்தால் அது அப்போது சரியாகி மீண்டும் திரும்ப ஜலதோஷம் பிடிக்கிறது. இந்த ஜலதோஷத்திற்கு என்ன மூலக்காரணம் என்றால் – அதுதான் அவருடைய உளவியல் சார்ந்த பிரச்சனையாகும். இம்மன வியாதிக்கு மருந்து கொடுக்காத பட்சத்தில் அவர் நிரந்தர நோயாளியாகிவிடுகிறார்.
பேசத்தெரியாத குழந்தைகளுக்கு மருந்து தேர்ந்தெடுப்பது எப்படி?
பேசத்தெரிந்தவர்களிடம் அவர்களின் மனக்கோளாறுகளை, உடல் கோளாறுகளை கேட்டறிந்து விடுகிறோம். ஆனால் பேசத்தெரியாத குழந்தைகளுக்கு எப்படி மருந்து கொடுப்பது? குழந்தைகள் பொய் சொல்லத் தெரியாதவர்கள் அவர்களின் நடவடிக்கைகளே , உடல் அசைவுகளே, அவர்களுடைய உண்மையான இயல்புகளை காட்டிவிடும். உதாரணமாக ஒரு குழந்தையை தூக்கிவைத்துக்கொண்டால், அதனிடம் விளையாடினால் பேசாமலிருக்கும். இது சிக்கரி என்னும் மருந்து கொடுக்கப்பட வேண்டிய குழந்தையாகும். மற்றொன்று குழந்தை,எதை கண்டாலும் பயந்து வீச்சென்று கத்தும்,தன் வீட்டிலுள்ள பூனை, நாய், கன்றுபசு என எதைக் கண்டாலும் பயந்து நடுங்கும். யாரேனும் புதிய உறவினர்கள் வந்தாலும் அவர்களைக் கண்டதும் கதறி அழும் .இதற்கு “மிமுலஸ்”இதற்கு எனும் மருந்து கொடுக்கப்பட வேண்டும். மற்றொரு குழந்தை எந்த தொந்தரவும் யாருக்கும் கொடுக்காது. போட்டது போட்டவாக்கில் எந்த நேரமும் தூங்கிக்கொண்டேயிருக்கும்.பசி எடுக்கும் ஆனால் பால் குடிக்க ஆர்வம் இருக்காது.இப்படிப்பட்ட குழதைக்கு “க்ளமாடிஸ்”என்னும் மருந்து கொடுத்தால்-நல்ல குணமாகும். எனவே இது போன்றே இம்மருந்துகள் ஒவ்வொருவருடைய மனநிலைக்கு ஏற்றவாறு கொடுக்கப்படுகிறது. மனநிலைக்கு மருந்து கொடுப்பதினால் உடல் நலமும் ஏற்படுகிறது.
மனிதரின் மனக்குறிகளுக்கேற்ற மலர் மருந்து
அநியாயத்தால் ஏற்பட்ட துக்கத்தை மனதிற்குள் அடக்கிக் கொள்வோர் அநேகம் பேர் இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “அக்ரிமனி”.
எல்லாவற்றையும் இழந்து,அநாதையாகி விட்டோம் எறு உணர்ந்துள்ள மனிதர்களும் உள்ளனர்.அவர்களுக்கும் உடல் உபாதைகள்.அப்படிப்பட்ட மனநிலை உள்ளோருக்கு கொடுக்கப்பட வேண்டி மலர் மருந்து “ஆஸ்பென்”
அநேகம் பேர் அநாவசியமாக உடல் பலத்தை செலவழித்து அதனால் உடல் உபாதைகளுக்கு ஆளாவார்கள் .அப்படிப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஆலிவ்”
அறிவிருக்கும்,அவர்களிடம் திறமையும் இருக்கும். ஆனால் பொறுமையிருக்காது.அதனால் மனநலம்,உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பர்-அவருக்குரிய – மருந்து “இம்பேசன்”
வீட்டிலும் சரி,அலுவலகத்திலும் சரி தனக்கு ஏற்கனவே ஒதுக்கிய வேலையை மட்டும் செய்வார்.சமயம் சந்தர்ப்பத்துக்கு கூடுதலான சமயம் என பொறுப்பை கொடுத்தால் அதை ஏற்கமாட்டார்.அதனால் அவருடைய உடல் நலம் மனநலம் பாதிக்கப்படும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “எல்ம்
ஒருவேலையும் ஒழுங்காக செய்யமாட்டார்.இதில் கொஞ்சம் மற்றொன்றில் கொஞ்சம் என மனம் மாறி கொண்டேயிருக்கும்.எதிலேயும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஒரே வேலையில் கவனம் செலுத்த முடியாதவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயிட் செஸ்ட்நட்”
இவருக்கு தன் தொழிலை மாற்றுவதுதான் தொழில் ஒவ்வொரு மணி,நாள்,வாரம்-என தன் தொழிலை மாற்றிக்கொண்டு –அதனால் மனநலம் உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயில்டு ஓட்”
ஊதாரி என்றால் ஊர்சுற்றும் ஊதாரிதான் .எதற்கும் லாயக்கல்ல.எதிலும் கொஞ்சம்கூட அக்கறையில்லாதவராய் இருப்பார் அவரின் மனநிலையை மாற்றி-பொறுப்பானவராக மாற்ற கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “ஒயில்ரோஸ்”.
கடினமாய் உழைப்பார் ஆனால் அதற்கான ஊதியம் கிடைக்காது விடாமல் படிப்பார்,ஆனால் பரீட்சையில் பாஸ் பண்ணமாட்டார்.உழைப்புக்கு உதாரணமாய் இருப்பார்.அவர் வாழ்க்கையில் எந்த வெற்றியும் காணமாட்டார்.அதனால் ஏற்பட்ட மனநிலை கோளாறுகளுக்கும்,உடல்நிலை கோளாறுகளுக்கும் கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“ஓக்” .
எதிலும் இவருக்கு அவநம்பிக்கைதான் -யாரையும் ம்பமாட்டார்.அவநம்பிக்கை தான் அவரின் முதலீடு .அதனால் அன்றாடம் அநேக பிரச்சனை சந்திப்பார்.அதிலிருந்து அவரை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கார்ஸ்”
இவர் எந்த நேரமும் சந்தோசமாக இருப்பார்-அதற்கு காரணம் அவரது எண்ணங்களில் ஏற்படும் கற்பனை தான்.அதை அப்படி செய்யலாம். இதை இப்படி செய்யலாம் என்று கற்பனையில் மிதந்தே தன் காலத்தை ஓட்டுபவர்.இவரை உழைப்பில் ஈடுபடுத்த கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கிளமாட்டிஸ்”.
எங்கும் எதிலும் சுத்தம் பார்ப்பவர்,இவர் எதை பார்த்தாலும் அருவருப்படைபவர். சுத்தமான பொருளையும் சுத்தம் செய்துதான் சாப்பிடுவார்.இதனால் சமூகத்தில் இவர் சந்திக்கும் பிரச்சைனைகள் ஏராளம்.அவரின் மனநிலை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“கிராப் ஆப்பிள்”.
எதிலாவது ஏதாவது கிடைக்குமா?என ஏங்குபவர்,அவரின் சுயநலமே அவரைச் சுற்றிசுற்றி வரும்.அப்படிப்பட்டவரின் மனநிலையை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“சிக்கரி”.
மற்றவர்களுக்கு சேவை செய்தே ஏமாறும் ஏமாளி-தன் முன்னேற்றத்தைப் பற்றி கொஞ்சம் கூட நினைத்து பார்க்க மாட்டார்.கவலைப்பட மாட்டார்.இந்த ஏமாளிக்கு ஏற்ற மலர் மருந்து-“சென்டாரி”.
தன்னிடம் நிறை திறமை இருக்கும் ஆனால் அத்திறமையைப் பற்றி அறியமாட்டார்-எதற்கெடுத்தாலும் பிறரின் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்வார்.அதனால் பல துன்பங்களை அனுபவிப்பார்.தன் திறமையை உணர –சாப்பிடவேண்டிய மலர் மருந்து-“செரட்டோ”.
இவரின் மனநலத்தை ,உடல்நலத்தை ,இவரால் கட்டுப்படுத்த முடியாது.நரம்பு மண்டல கோளாறுகளுக்கு ஆளாவர்.இவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“செர்ரிப்பளம்”.
போதுமான வயது இருக்கும்,ஆனால் அதற்கேற்ற அறிவு வளர்ச்சி இருக்காது.நிறைய படித்திருப்பார் ஆனால் பண்பாடு இருக்காது.அப்படிப்பட்டவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “செஸ்ட் நட் பட்”.
தன் ஒழுக்கம், தன் கட்டுபாட்டை கடைபிடிப்பவர்.மற்றவர்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என விரும்புவர்.அப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர்.எதிர்பார்ப்பு ஏமாற்றமானால் என்னவாகும்-மனநிலை பாதிக்கும்.அத்தகையோருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “பீச்”.
தன்னம்பிக்கை இல்லாதவர்களும் இவ்வுலகில் உண்டு.அவர்களுக்கேற்ற மலர் மருந்து-“லார்ச்”.
தன்னையும்,தன் ஆத்ம சக்தியை அறியாதவர்கள் அநேகம் பேர்-அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“மஸ்டார்டு”.
பயப்படும் சூழ்நிலையில் வாழ்வோருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “மிமுலஸ்”.
இயற்கை சீற்றங்களுக்கும்,மற்றவர்களின் மிரட்டல்களுக்கும் பீதியடைபவர்.சின்ன சின்ன விவசாயங்களுக்கெல்லாம் பீதியடைவார்.அவரை தேற்ற கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“ராக்ரோஸ்”.
தன்னளவில் கடுமையான ஆச்சாரங்களை கடைபிடிப்பவர்.கல் மனம் என்பார்களே ,அவர் மனமும் அப்படிதான்.அவருக்குரிய மலர் மருந்து-“ராக் வாட்டர்”.
தன் துயரம் கண்டுகொள்ளமாட்டார்.ஆனால் தம் உற்றார் உறவிர்களின் துன்பம் கண்டு கலங்குபவர்.என்னாகுமோ என பயப்படுபவர்.இவருக்குரிய மலர் மருந்து “ரெட் செஸ்ட் நட்”.
நோய் எதிப்பு ஆற்றல் அறவே அற்றவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“வால் நட்”.
தன்னைவிட யார் உயர்ந்தவர்-தனக்குள் அடக்கம் தான் யாவரும் என்ற எண்ணமுடையவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“வாட்டர் வயலட்”.
பிறரை அடக்கியாள நினைக்கும் கர்வமுடைய சர்வாதிகாரி.இவருக்கேற்ற மலர் மருது “வைன்”.
கொஞ்சம் கூட சளைக்கமாட்டார்.ஓய்வே தேவைப்படாது.அதுவும் அதிக ஆர்வத்துடன் கடுமையாக உழைத்துக் கொண்டேயிருப்பார்.இவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து ”வெர்கூஷவன்”.
பிறரை குற்றம் சொல்வதே வேலை.ஆனால் தான் கற்றுக் கொள்ளாதவர்.தன் தவறுகளை திருத்திக்கொள்ள மறுப்பவர்.அவரை நியாயப்படுத்தி பேசுபவர் கொஞ்சம் கூட மாறமாட்டார்.”வில்லே” என்ற மலர் மருந்து கொடுத்தால் இவரை மாற்றி விடும்.
தனக்கு ஏற்படும் சாதாரண தோல்விகளையும், தடைகளையும் கண்டு கலங்கி துவண்டு போய்விடுவார். ” ஜென்சியன்”என்ற மலர் மருந்தை இவருக்கு கொடுத்தால் தேறிவிடுவார்.
கடந்தகால சம்பவங்களை நினைத்து வருந்தி கொண்டிருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய மலர் மருந்து ”ஹனிசக்கிள்’.
”ஹார்ன்பீம்” என்ற மலர் மருது மிக அதிக அளவில் சக்தியை இழநதவர்களையும்,மனச்சோர்வு உடையவர்களையும் தேற்றிவிடும்.
எதிலும் முன்னெச்சரிக்கை உடையவர்.கொஞ்சம் கசப்பு,வெறுப்புடன் பழகுபவர்.இவருக்குரிய மலர் மருந்து”ஹால்லி”.
சாவு இடத்திலே கூட தன்னைப்பற்றியே பேசுவார். ”ஹீதர்”என்ற மலர் மருந்து அவரை அற்புதமாக மாற்றி விடும்.
இரண்டு மனதிற்கு சொந்தக்காரர்.குழப்பத்திலே மிதப்பவர்.”ஸ்கிளராந்தஸ்” என்னும் மலர் மருந்து அவரை மாற்றிவிடும்.
அதிர்ச்சிக்குள்ளானவரை “ஸ்டார் ஆப் பெத்லஹேம்” என்ற மலர் மருந்து அற்புதமாக மாற்றிவிடும்.
உதவி செய்யத் தெரியாமல்,உதவப்போய் தலைகுனிவை ஏற்படுத்திக் கொள்பவர்களை- “பைன்” என்ற மலர் மருந்து தேற்றிவிடும்.
எந்த துயரம் வந்தாலும் யாரையும் அழைக்கமாட்டார்.ஏன் இறைவனையும் அழைக்கமாட்டார். “ஸ்வீட் செஸ்ட்நட்”என்னும் மலர் மருந்து அவருக்கு ஆறுதல் சொல்லும்
மலர் மருந்து உட்கொள்ளும் அளவு விகிதம், நேரம்
மலர் மருந்தில் ஒரு துளியை அரை அவுன்ஸ் தண்ணீரில் கலக்கி ஒரு வேளை மருந்தாக சாப்பிடலாம்,இப்படி ஒரு நாளைக்கு பல முறை சாப்பிடுவதில் சிரமம் இருப்பின், மாத்திரையாகவும் உபயோகிக்கிலாம்.
பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பால்சர்க்கரை உருண்டை (மாத்திரை) கடுகு அளவுகளிலிருந்து குண்டுமணி அளவு மாத்திரைகளும் கிடைக்கின்றன. குண்டுமணி அளவு மாத்திரை ஒரு வேளைக்கு இரண்டும்,நடுத்தர மாத்திரைகள் நான்கும்,கடுகளவுள்ள மாத்திரைகள் எட்டும் சாப்பிடுவது சரியானதாகும்.சிறுவர்களுக்கு இதில் பாதி கொடுத்தாலே போதும்.சகல மலர் மருந்துகளுக்கும் ஒரே அளவு தான். ஹோமியோ,பயோ மருந்துகளைப் போல் இம்மருந்துகளிலும் நச்சுத்தன்மையில்லை.எனவே அளவு அவ்வளவு முக்கியமல்ல. பிறந்த குழந்தை முதல் யாவரும் அவரவர் குணம் குறிகளுக்கு ஏற்ப மருந்து தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. நீடித்த வியாதிகளில் தினம் 4 முறையும்,தீவிர வியாதிகளில் 3 மணிக்கொரு முறையும்,ஆபத்தான சமயங்களில் 5-நிமிடங்களுக்கொரு முறையும் கொடுக்கப்படுகிறது. இதுபோன்று இம்மலர் மருந்துகளை தனியாகவும் கொடுக்கலாம் அல்லது ஹோமியோபதி மருந்துகள் கொடுக்கும்போதே இதையும் சேர்த்துக் கொடுக்கலாம்.இம்மருந்துகள் தாழ்ந்த வீரியம் என்பதால் இவற்றை முழு குணம் கிடைக்கும் வரை கொடுக்கலாம்.ஆனால் அவசர நிலைமைகளில் ஒரு சில வேளைகளே போதும்.மலர் மருந்து தேர்வு உட் கொள்ளும் அளவு,விகிதம்,நேரம் இரண்டையும் ஒன்றாக்கவும்.
கட்டுரை: மேக்னம், தமிழ்நாடு
L

Kidney Care!!!!


சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.
கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.
மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritonial dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.
எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார், தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.
இஞ்சி ஒத்தடம்:
இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.
பாதத்தின் நான்காம் விரல்:
நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.
உணவு முறை
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்:
உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
புரதங்கள் (ப்ரோடீன்):
புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.
நீர்:
நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை
ஒமம்:
ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
புளி:
புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்:
மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
காய்கறிகள்:
பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
பழங்கள்:
ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்
தவிர்க்க வேண்டியவை
காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்
இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ...
அருமை நண்பர்களே !... இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , மட்டுமல்ல பணம் பிரச்சினியால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் .. எனவே இந்த தகவலை பலருக்கும் எத்தி வைக்க தயவு செய்து Share செய்யவோ அல்லது தனி நிலைத்தகவலாகவோ உங்கள் Time Line ள் பதிவு செய்து உதவுமாறு மின்ன அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ..
- தக்கலை கவுஸ் முஹம்மத்

Tuesday, 10 June 2014

hOMEO for CKD(Chronic Kidney Disease)!!!




Chronic  Kidney  Disease  CKD  and  its  homeopathic treatment 
Self  treatment  scheme  for  Chronic  Kidney  Disease  CKD 
জটিল  কিডনী  রোগ  এবং  তার  হোমিওপ্যাথিক চিকিৎসা
http://bashirmahmudellias.blogspot.com/
https://bashirmahmudellias.wordpress.com/
http://bashirmahmudellias.weebly.com/
                                                                   
Dear  all,

        Take  these   homeopathic  medicines  (as  a  cure  for  Chronic  Kidney  Disease  CKD) according  to  my  direction.  I  am  optimistic  that  my  formula  will  give  a  full  cure  or tremendous  improvement  for  99%  of  Chronic  Kidney  Disease  CKD  patient (like  nephritis, glomerulonephritis,  Bright's disease, kidney failure,  renal insufficiency, polycystic kidney, kidney stones, kidney tumors etc ).  Although  few  cases  will  not  get  full  cure ;  still  they will  get  ten  fold  better  result  than  any  other  healing  systems. Take  these  medicines repeatedly  in  a  cyclical  way  (i.e.  after  no.- 13  start  again  from  no.- 1).  Yea,  it  is  better  to  take  all  homeopathic  medicines  in  empty  stomach ;  but  you  can take  them  after  meal  if  you  forget.  You  can  take  these  homeopathic  medicines along  with  other  allopathic  or  herbal  medicines (whether  they  may  be  tablet, capsule  or  injection).  It  will  not  cause  any  trouble.  But  it  is  better  to  take  all homeopathic  medicines  half  an  hour  before  or  after  other  medicines.  Try  to  buy Germany  or  U.S.A.  made  medicines.

            You  can  exclude  any  of  these  medicines  if  it  seems  don't  helping  you  or causing  undesirable  side-effects (like  acidity,  vertigo,  pain,  vomiting  etc)  or  is  not available  in  the  local  market.  Continue  rest  of  the  medicines  according  to  their suggested  order  or  serial.  Do  not  change  my  recommendation  on  potency  and  dose, but  you  can  take  the  nearest  potency  if  the  recommended  potency  is  not available  in  the  local  market.  You  should  know  that  the  names  of  the  homeopathic medicines  are  universal (that  means  they  could  be  found  with  the  same  name  in  every country).  You  should  take  the  lowest  potency  first  and  try  to  increase  the  potency gradually  in  the  next  round  if  possible.  In  some  rare  cases,  you  may  need  to  consult a  homeopathic  specialist  to  be  able  to  use  more  precisely  selected  medicines (which best  suit  with  your  physical  and  mental  make-up).  You  will  need  to  take  these medicines  until  you  attain  a  full  cure  or  sufficient  improvement. 

            Many  people  are  writing  to  me  enquiring  how  to  collect  these  homeopathic medicines.  These   homeopathic  medicines  are  actually  the  most  common  homeo medicines.  You  can  buy  them  from  any  homeopathic  pharmacy.  As  far  as  I  know, homeopathic  medicines  are  available  in  most  of  the  major  cities  in  the  world.  If  these are  not  available  in  your  area,  then  you  can  collect  them  by  ordering  to  many companies  over  e-mail.  In  this  regards,  these  following  three  links  may  greatly  help  you:-

1.  http://hpathy.com/homeopathy-pharmacies/
2.  http://www.hmedicine.com/homeopathic/single_remedies
3.  http://bashirmahmudellias.blogspot.com/2009/01/great-homeopathic-dispensaries-in-dhaka.html
          
Rx

     (1)  Thuja  occidentalis                          200/1M/10M
          (At  first  take  this  homeopathic  medicine  1  drop / 5 pills   01  time  daily  for  1  day.)
     (2)  Chimaphila  umbellata                      Q/3c/6c/3/6      
          (Then  take  this  homeopathic  medicine  10  drops  02 times  daily  for  1  week.)
     (3)  Calcarea  Phosphorica                 6x/3c/6c/3/6/30
          (Then  take  this  homeopathic  medicine  1  drop / 5 pills  02  times  daily  for  1  week.)     
     (4)   Ocimum  canum                         3/6/12/30/200
          (Then  take  this  homeopathic  medicine  1  drop / 5 pills  02  times  daily  for  5  days.)
    (5)  Veratrum  album                        6x/3c/6c/3/6/30
          (Then  take  this  homeopathic  medicine  1  drop / 5 pills  02  times  daily  for  3  days.)     
     (6)   Arnica  montana                         3/6/12/30/200
          (Then  take  this  homeopathic  medicine  1  drop / 5 pills  02  times  daily  for  7  days.)
    (7)  Alfalfa                                          Q/3c/6c/3x/6x
          (Then  take  this  homeopathic  medicine  29  drops   02 times  daily  for  1  week.)
    (8)  Kali  Bichromicum                                    30/200
          (Then  take  this  homeopathic  medicine  1  drop / 5 pills  02  times  daily  for  2  days.)
    (9)  Acidum  Picricum                                   30/200
          (Then  take  this  homeopathic  medicine  1  drop / 5 pills  02  times  daily  for  1  week.)     
    (10)  Sepia                                                       30/200
          (Then  take  this  homeopathic  medicine  1  drop / 5 pills  02  times  daily  for  3  days.)     
    (11)  Terebinthina                                       3/6/30/200
          (Then  take  this  homeopathic  medicine  1  drop / 5 pills  02  times  daily  for  1  week.)     
    (12)  Carbo  vegetabilis                       6x/3c/6c/3/6/30
          (Then  take  this  homeopathic  medicine  1  drop / 5 pills  02  times  daily  for  1  week.)     
    (13)  Acidum  Nitricum                            3/6/30/200
          (Then  take  this  homeopathic  medicine  1  drop / 5 pills  02  times  daily  for  5  days.  Now  start  taking  from  no. 1 medicine  in  similar  rules  if  necessary.)     

                                                                    


Dr. Bashir Mahmud Ellias
                                          Author, Design specialist, Islamic  researcher,  Homeo consultant  
13/ka   K.  M.  Das  Lane  (1st  floor),
(Near  Humayun  shahib  railgate  & 
over  Razia  Pharmacy)
Tikatoli,   Dhaka, 
Bangladesh.
Mob :  +880-01916038527
E-mail : Bashirmahmudellias@hotmail.com
Website : http://bashirmahmudellias.blogspot.com
Website : https://bashirmahmudellias.wordpress.com