Saturday, 24 October 2015

ஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா? கவலை எதுக்கு... அரிசி இருக்கு!
தண்ணீரில் ஸ்மார்ட் போன் விழுந்த விளைவு...
போன் ஆன் ஆகுது, Incoming call வருது; ஆனா touch screen work ஆகலை; Touch screen work ஆகாம போன்ல எதையுமே பண்ண முடியல; Phone ஐ unlock கூட பண்ண முடியலை;
Google -ல பாா்த்தேன்.
இப்படி போன் தண்ணீரில் நனைந்து விட்டால், phone back cover, sim card, memory card, battery எல்லாத்தையும் கழற்றி விட்டு, ஒரு air lock cover-ல அரிசிய போட்டு, அதுக்குள் phone-ஐ போட்டால், phone-க்குள் இருக்கும் தண்ணீரை அரிசி உறிஞ்சி விடுமாம். அரிசியால LCD Screen க்கு பின்னால் இருக்கும் தண்ணீரை கூட உரிஞ்ச முடியும் என்று Google கூறியது.
air lock cover-க்கு எங்கே போவது என நினைக்கையில், "பேசாம phoneஐ அரிசி பாத்திரத்துக்குள்ளேயே போட்டுட்டா என்ன?" என , phoneஐ அரிசி பாத்திரத்துக்குள் போட்டு புதைச்சுட்டு, அரை மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தேன்.
WOW... Touch Screen இப்போ நல்லா ஒர்க் ஆகுது. உடனே outgoing calls போகுதா, key pad work ஆகுதா, music play ஆகுதா-னு எல்லாம் செக் பண்ணிணேன். Rear Camera lensல தண்ணீர் திரை (bubbles) போல தெரிந்தது. மறுபடியும் அரை மணி நேரம், அரிசியின் உதவி தேவைப்பட, இப்போ என் phone- perfectly alright.
எதிர்பாராம உங்களில் யாராவது மழையில் போனுடன் நனைந்து விட்டால், இந்த தகவல் உபயோகமாக இருக்கும்!!!

Friday, 23 October 2015

WhatsApp!!!

WhatsAppல் அனுப்பியவருக்கு தெரியாமல் செய்தியை படிப்பது எப்படி?

சமீபத்தில் WhatsApp அறிமுகம் செய்த நீல நிற இரு குறிகள் பலரையும் பலவிதமான சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.
நான் அனுப்புன மெசேஜ் பார்த்த அப்புறமும் ரிப்ளே பண்ணல நீ!
என பல மனைவிகள், காதலிகள், முதலாளிகள் கேட்கத் துவங்கி விட்டனர்.
எனவே., ஒரு புதிய வழியின் மூலம் android கைபேசி வைத்திருப்போர் தாங்கள் செய்தியை பார்த்திருந்தாலும் , அனுப்பியவருக்கு நீல நிற குறிகள் தெரியாமல் செய்யல்லாம்.
படி (1) – உங்கள் கைபேசியில் குறைந்தது android 2.1 அல்லது புதிய android இருக்க வேண்டும்.
படி (2) – Settings > Security > ‘Download from Unknown Sources’ என்பதை தேர்வு செய்யவும்.
படி  (3) – www.whatsapp.com/Android/ என்ற முகவரியில் இருந்து APK கோப்பை தரவிறக்கி நிறுவ வேண்டும்.
படி (4) – இப்பொது WhatsApp திறந்து “Settings > Account > Privacy” என்பதில் “Read Receipts” எனும் தேர்வை நீக்க வேண்டும்.
1. உங்களுக்கு வந்த செய்திக்கான நீல நிற குறி எப்படி அனுப்பியவருக்கு தெரியாதோ.,
2. அதே மாதிரி., நீங்கள் அனுப்பிய செய்தியை மற்றவர் படித்தாரா எனும் நீல நிற குறி நீங்கள் அனுப்பிய செய்திகளுக்கும் இனி தெரியாது.

3. ஆனால் நீங்கள் Group Message செய்தீர்கள் என்றால் அதில் அனுப்பியவருக்கு நீல நிறக் குறி தெரியும்.

விண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி!!!

விண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான

முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம்
அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.

[caption id="attachment_2023" align="aligncenter" width="383" caption="படம் 1"][/caption]

விண்டோஸ் எக்ஸ்பியில் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிப்பது
பற்றிய பதிவுக்கு கிடைத்த ஆதரவும் சராசரியாக 100 மேற்பட்டவர்கள்
பின்னோட்டம் மூலமும் இமெயில் மூலமும் விண்டோஸ் 7 -ல்
இணைப்பு வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று கேட்டிருந்தனர்.
உங்கள் அனைவருக்காகவும் விண்டோஸ் 7 -ல் இண்டெர்நெட்
இணைப்பு வேகத்தை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.

[caption id="attachment_2024" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

முதலில் start பொத்தனை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுத்து
அதில் படம் 1-ல் காட்டியபடி system.ini என்று கொடுத்து ok
பொத்தானை அழுத்தியதும் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும்.
இதில் ஏற்கனவே நம் கணினிக்கு துனை புரியும் சில கோடிங் வரிகள்
கொடுக்கப்பட்டிருக்கும்.  கோடிங் வரிகள் முடிந்ததும் படம் 2-ல்
காட்டியபடி நாம் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோடை(Code) ஐ
காப்பி செய்து அங்கு சேர்க்கவும்.
page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps


அடுத்து File மெனுவில் save என்ற பொத்தானை அழுத்தி சேமித்து
விட்டு வெளியே வரவும். அடுத்து கணினியை Restart செய்துவிட்டு
கணினியின் இண்டெர்நெட் வேகத்தை சோதித்துப்பார்க்கவும்.  இப்போது
இண்டெர்நெட் இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும்.

பற்கள்!!!

பற்கள் பளிச்சிட - ஆயுர்வேதம் Ayurvedic

காலையில் எழுந்தவுடன் பற்களைத் தேய்க்க நாம் உபயோகப்படுத்தும் பற்பசைகள் பலதும் இனிப்புச் சுவை கொண்டதாக இருக்கின்றன. சுவையல்ல, அதிலுள்ள மூலப்பொருட்கள்தான் பற்களை சுத்தமாக்குகின்றன
என்று அவர்கள் வாதிடக் கூடும். ஆனால் வாயிலுள்ள ஊத்தை, நாற்றம், பற்களிலுள்ள மஞ்சள் கறை ஆகியவற்றை கசப்பும் துவர்ப்பும் காரமும் கொண்ட மூலிகைப் பொருட்களால் மட்டுமே முழுவதுமாக நீக்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இச்சுவைகளைக் கொண்ட எட்டு மூலிகை மருந்துகளான சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலரிசி, லவங்கப்பட்டை, லவங்கப் பத்திரி, இந்துப்பு, வால் மிளகு ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து நன்கு இடித்துத் துணியால் சலித்து அதில் 120 மில்லி லிட்டர் தேனும் 20 மி.லி. நல்லெண்ணெயும் விட்டுக் குழப்பி வைத்துக் கொள்ளவும். நடு விரலையும் மோதிர விரலையும் இந்த மூலிகைப் பற்பொடியில் தோய்த்து ஒவ்வொரு பல்லையும் தனித்தனியே கீழும் மேலுமாகத் தேய்ப்பது நல்லது. கடைவாய்ப் பற்களில் அதன் மேலேயும், பக்கவாட்டிலும் தேய்க்கவும். அதன்பிறகு குளிர்ந்த தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும்.

இதைத் தயாரிப்பதற்குக் Prepare கஷ்டமாக இருந்தால் கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலையில் விற்கப்படும் தசனகாந்தி எனும் சூரணத்தைப் பயன்படுத்தலாம். இதில் தேன் Honey, நல்லெண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. மலம், சிறுநீர் கழித்த பின்னரும், நல்ல வெயிலில் அலைந்து வந்த பின்னரும் வாய் கொப்பளிப்பதைப் பழக்கமாக நம் முன்னோர்கள் கையாண்டு வந்ததற்குக் காரணம் பற்களை என்றென்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் கருதியதுதான்.

மஞ்சள் கறை படிவதற்கு முக்கியக் காரணம், காபி Coffee, டீ Tea பருகிய பின்னரும், டிபன் Tiffen சாப்பிட்ட பின்னரும் வாயைத் தண்ணீரில் கொப்பளித்து சுத்தம் செய்து கொள்ளாதிருப்பது தான். பான்பராக், புகையிலைப் பழக்கம், உணவில் பெரும் பகுதி இனிப்பாகவும், காரம், துவர்ப்பு சுவை குறைவாக இருப்பதையும் குறிப்பிடலாம். பற்களைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு ஆலம் விழுது, வேலம் விழுது, அத்திக் குச்சி, மாங்குச்சி, நாவல் குச்சி, நாயுருவிக் குச்சி ஏற்றவை. இவற்றில் ஏதேனும் ஒன்றை 9-10 அங்குல நீளமாக வெட்டி எடுத்துக் கொண்டு, நுனியைப் பற்களால் கடித்துப் பஞ்சு போல மெதுவானதாகச் செய்து பற்களில் மேலும் கீழுமாகத் தேய்த்து வர மஞ்சள் கறை நீங்கி விடும்.

இரவில் படுக்கும் முன்னும் ஒருமுறை பல் துலக்கும் பழக்கம் ஏற்படுத்துதல் நல்லது. அதனால் ‘எனாமலை‘ அரிக்கும் தன்மையுள்ள பொருட்கள் பல்லில் பல மணி நேரம்- ஏறத்தாழ 10 மணி நேரம் தங்குவது நேர்வதில்லை.

காலை மற்றும் இரவு உணவிற்குப் பிறகு ஆயுர்வேத மருந்துக் கடைகளில் Medical Shops விற்கப்படும் அரிமேதஸ்தைலம் எனும் மூலிகை எண்ணெய்யை 1-2 ஸ்பூன் அளவு வாயினுள் விட்டுக் கொண்டு நன்கு கொப்பளித்து வாயில் உமிழ்நீர் நிரம்பியதும் துப்பி விடவும். இதன்பின், வெதுவெதுப்பான தண்ணீரால் கொப்பளித்துத் துப்பி வாயைச் சுத்தப்படுத்துவதன் மூலம் வாய் ஊத்தை, பற்களில் கறை, சீழ், ஈறுகளில் வீக்கம், பல் கூச்சம் ஆகியவை நீங்கிவிடும்.நாக்கில் சுவை அறியும் சக்தி வளரும். தொண்டை வாய் உலர்ந்து போகாது. உதடு வெடிக்காது. பற்கள் தேயாது.

உடல் ஆரோக்கியத்தின் திறவுகோலாக பல் பாதுகாப்பு இருப்பதால் அதில் அதிகக் கவனம் செலுத்துவது நல்லது.

சன்னா கிரேவி!!!

சுவையான சன்னா மசாலா கிரேவி

சன்னா சத்தானது குழந்தைகளுக்கு விருப்பமானது. இதனை சுண்டல் செய்வதோடு இல்லாமல் கிரேவியாகவும் சமைத்து சாப்பிடலாம். சுவையாக சன்னா மசாலாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்


தேவையான பொருட்கள் 

சன்னா – 1 கப்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி-3

மிளகாய்த் தூள் -2 டீஸ்பூன்

தனியா தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

தேங்காய் அரைத்தது – 1 கப்

சீரகம் – அரை டீஸ்பூன்

பட்டை – 1

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

சன்னா செய்முறை

சன்னாவை 7 மணி நேரம் நன்கு ஊறவிட்டு குக்கரில் வேகவையுங்கள். 5 விசில் வரை விடவும்.

சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வதக்குங்கள். தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். இத்துடன் சன்னா சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள தேங்காயை ஊற்றி ஸ்டவ்வை மிதமாக எரிய விடவும். மற்றொரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை,பட்டை,சீரகம் சேர்த்து தாளித்து மசாலாவில் சேர்க்கவும். சுவையான சன்னா மசாலா ரெடி.

இட்லி, பிரெட், சப்பாத்தி, பூரிக்கு சத்தான சைட் டிஷ் இது

Friday, 9 October 2015

ஜீவ நாடி!!!

அகத்தியர் ஜீவ நாடி - மேட்டுபாளையம் கோயம்புதூர் , தஞ்சாவூர்


அகத்தியர் ஜீவ நாடி - படிக்கும் ஊர்கள் ,முகவரி மற்றும் போன் நம்பர்கள் 

மேட்டுபாளையம் கோயம்புதூர் ,  தஞ்சாவூர் 




அகத்தியர் ஜீவ நாடி -தஞ்சாவூர்






ஓலைச் சுவடி


ஜீவ நாடி என்றால் என்ன?

ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கை. எனவே ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும். மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம் ஜோதிடரிடம் போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.
“இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது. அவ்வாறு அவர்கள் முறை தவறி நடந்து கொண்டால் நாடி பலிக்காது, நாளடைவில் பலன்கள் தவறாகிச் செயலிழந்து விடும்” என்பது நாடி ஜோதிடர்களின் கூற்று.
தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றனர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றனர் பலர். 


1)
அகத்தியர் ஜீவநாடி படிக்கும் 
அகத்தியர் ஆசிரமம் 

 you tube video 






மூன்றாவது கண் நிகழ்ச்சி வீடியோ 




 திரு தங்கராசன் சுவாமிகள் 

ஸ்ரீ அகத்தியர் ஞான பீடம் 

Sri.Thangarasan Swamigal,
Sri Agathiyar Gnana Peedam,
2/464, Agathiyar Nagar,
Thoorippalam,
Kallar - 641 305,
Mettupalayam,
Coimbatore,
Tamilnadu,
India
Cell No:Swami - 9842027383

Maathaji - 9842550987







 YOUTUBE VIDEO- EXPERIENCE 



  
                                    


2) அகத்தியர் ஜீவநாடி- தஞ்சாவூர் 

அகத்தியர் ஜீவ நாடி -தஞ்சாவூர் இணையதள முகவரி 

http://www.jeevaarulnaadi.com/request.php

ஹனுமத்தாஸனைப் போலவே தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாது, ஜோதிடத்தை ஒரு சேவையாக எண்ணிச் செய்து வருபவர் திரு கணேசன். இவரிடம் இருப்பதும் அகத்தியர் ஜீவநாடிதான். பல ஆண்டுகளாக இவர் தன்னிடம் இருக்கும் ஜீவநாடி மூலம் பலன் சொல்லி வருகிறார். உலகெங்கிலுமிருந்தும் பலர் இவரிடம் நாடி பார்க்க வருகின்றனர். பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் இவரிடம் வந்து ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளனர்.
இதற்காக இவர் ”கட்டணம் இவ்வளவு கொடு” என்று கேட்டு வாங்குவதில்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறார். அவ்வாறு வரும் பணத்தையும் நாடியில் வரும் கட்டளைப்படி அன்னதானத்திற்கும், தீப வழிபாட்டிற்கும், யாகங்கள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார். ஒரு ஆன்மீக சேவையாகவே எண்ணி இதைச் செய்து வருகிறார்.



இவருடைய முகவரி

Mr. J.Ganesan
Siddhar Arut Kudil
No. 33/56,2nd street
co-operative colony
opp. co-operative bus stop
Thanjavur-7

 தொடர்பு எண் : 9443421627
திரு கணேசன் அவர்கள் அகத்தியர் 
ஜீவநாடி 
படிக்கும்  YOUTUBE வீடியோ 
அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ



http://www.youtube.com/watch?v=GCENLrMcT7Q

பெரும்பாலான நேரங்கள் அவர் நாடி படித்துக் கொண்டிருப்பதாலும், பூஜை செய்து கொண்டிருப்பதாலும் ( செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். அவர் போனை ஆன் செய்து வைப்பதே கொஞ்ச நேரம் மட்டும் தான்) 
இதில் முக்கியமான விஷயம். இது சாதாரண நாடிகளைப் போன்றதல்ல. ஜீவநாடி. ஆகவே ஆன்மீகம், ஞானம், சித்த யோகம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு மிகத் தெளிவான பதில்கள் கிடைக்கும். வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தகுந்த ஆலோசனைகள் கூறப்படுகின்றன.
சித்தர் அருட் குடிலுக்குச் செல்லும் வழி :  தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும். வழியில் பழைய ஹவுஸிங் யூனிட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அருட் குடிலுக்குச் செல்லலாம்.
 மற்றொரு வழி :  பழைய பேருந்து நிலையத்தில் இருந்து K74 அல்லது B6A ஆகிய பேருந்துகளில் ஏறி கோ-ஆபரேடிவ் காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் அருகிலேயே குடில் பார்வைக்குக் கிடைக்கும்.



முன் அனுமதி பெற :

இறை அருளால் , வாக்கு பெற விரும்புவோர் ஜீவ அருள் நாடி வாசிப்பாளரான மேதகு.திருவாளர். J. கணேசன் அவர்களுடைய +91 9443421627 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, முன் அனுமதி பெற்றுக் கொள்ளவும். 


சித்தர் அருட் குடில் இ - மெயில் முகவரி             :  arut.kudil@gmail.com
சித்தர் அருட் குடில் 
கலந்துரையாடல் வலைதள இணைப்பு                  :  https://groups.google.com/forum/#!forum/agathiar  
சித்தர் அருட் குடில்
கலந்துரையாடல் வலைதள இ-மெயில் முகவரி      :  agathiar@googlegroups.com
இறை அருளாலும் சித்தர்களின் ஆசி, அனுமதியோடும் "ஜீவ அருள் நாடி" குறித்து பின்வருமாறு உரைக்கப்படுகிறது.



சுகர் ஜீவநாடி- ஸ்ரீ குமார் குருஜி 

 

 

ஸ்ரீகுமார்குருஜி

முகவரி 

New No 8/ Old No 22,
 Arulambal street, T Nagar.
Land mark:  (Kanada Sangh
school) Chennai - 600 017.
  Tel.:(044) 28342483 




  மேலும் அறிய

http://copiedpost.blogspot.in/2012/07/blog-post_26.html


நாடி சொல்லும் கதைகள் ( 5 பாகங்கள் )


(ஜீவநாடி சொல்லும் கதைகள்  ஹனுமந்தாசன் )

அறந்தாங்கி சங்கர்  பதிப்பகம்

Karthik Videos.
No:9 Basker Street
Nehru Nagar, Saligramam
Chennai 600093
Phone: +91.9444160161
E-mail: aranthankisankar@gmail.com

http://www.aranthankisankar.in/

http://www.aranthankisankar.in/karthik-videos-tv-serial-producers-books.html


Add caption
  மேலும் அறிய

ஸ்ரீ காகபுஜண்டர் மகரிஷி ஜீவநாடியை பற்றி 

ஸ்ரீ காகபுஜண்டர் மகரிஷி ஜீவநாடி 


சுகர் மகரிஷி ஜீவநாடியை பற்றி அறிய 

சுகர் மகரிஷி ஜீவநாடி



ஷீரடி சாய் பாபா வோட


அருள்வாக்கு 



முக்காலமும் அறிந்த என் குருநாதர் சாய் பாபா 

உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை 

சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் 

saibabatrichy@gmail.com 

 ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்


என் குருநாதரை பற்றி அறிந்து 

 

கொள்ள கீழே உள்ள லிங்க் ல் 

 

தொடரவும் 


 

பைரவர் வழிபாடு - கை மேல் பலன் 

http://copiedpost.blogspot.in/2012/06/blog-post_9026.html


பைரவர் வழிபாடு - கை மேல் பலன் - தன்னை வெளிபடுத்திய பைரவர்

 http://copiedpost.blogspot.in/2014/05/blog-post_6.html

 

பைரவரும் , பாபாவும் , என் குருநாதர் சாய் பாபா உபாசகரும் , என் அனுபவங்களும்

http://copiedpost.blogspot.in/2014/10/blog-post.html


ஓம் சாய் ராம் 
------------------------------------------------------------------------------------------------------------

    சித்தர்கள் திருவடிக்கே சரணம்



    முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் 

    இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan


    http://copiedpost.blogspot.in/2012/12/live-dharshan.html