Tuesday, 25 June 2024

வயிற்றில் வலி!!!

வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? உங்கள் வயிற்றில் உண்டாகும் வலி சாதாரணமான வலியா அல்லது குடல் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்குகிறதா என்பதை நீங்கள் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடியும். By Saravanan Kirubananthan Updated: Thursday, August 9, 2018, 11:03 [IST] வயிற்று வலி என்பது நாம் அனவைரும் கடந்து வரும் ஒரு வலி தான். ஆனாலும், வயிற்று வலிக்கான பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் சில காரணங்கள் இந்த பதிவில் இடம்பெற்றுள்ளன. உங்கள் வயிற்றில் உண்டாகும் வலி சாதாரணமான வலியா அல்லது குடல் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்குகிறதா என்பதை நீங்கள் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடியும். தொடர்ந்து படித்து வயிற்று வலியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? திடீர் வயிற்று வலி எந்த இடத்தில் - உங்கள் தொப்புளை சுற்றி திடீர் என்று வலி , இதனுடன் சேர்த்து குமட்டல், காய்ச்சல் , வாந்தி, குடல் இயக்கத்தில் அழுத்தம் , அடிவயிற்று தசைகளில் இறுக்கம் சாத்தியமான காரணங்கள் குடல் அழற்சி என்னும் அப்பெண்டிக்ஸ் என்ன செய்ய வேண்டும் - உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள். குடல் அழற்சியைப் போக்க உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது, இல்லையேல், தொற்று பாதித்த திரவம் அடிவயிற்றின் மற்ற பாகங்களுக்கு பரவ நேரிடும் . அடிவயிற்றில் உண்டாகும் இறுக்கம், தொற்று மற்ற இடங்களுக்கு பரவுவதற்கான அறிகுறியாகும். தலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? தலையணை இல்லாமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? வாய்வு வெளிப்படுவதுடன் வலி : எந்த இடத்தில் - தொப்புளுக்கு கீழே மற்றும் தொப்புளை சுற்றி வலி மற்றும் வாய்வு வெளிப்பாடு சாத்தியமான காரணங்கள் - மலச்சிக்கல் அல்லது வாய்வு என்ன செய்ய வேண்டும் - மலமிளக்கி அல்லது வாய்வு போக்கும் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இரண்டு வாரங்களுக்கு மேல் வலி நீடித்தால் மருத்துவரிடம் செல்லலாம். கறிவேப்பிலை சாப்பிடுவது உங்க முடிக்கு மட்டுமல்ல இந்த உறுப்புகளுக்கும் நல்லதாம். மறக்காம சாப்பிடுங்க.!கறிவேப்பிலை சாப்பிடுவது உங்க முடிக்கு மட்டுமல்ல இந்த உறுப்புகளுக்கும் நல்லதாம். மறக்காம சாப்பிடுங்க.! வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? உங்கள் வலது பக்கத்தில் திடீர் வலி : எந்த இடத்தில் - அடிவயிற்றின் வலது பக்கத்தில் உண்டான வலி, அதிகரித்து அடிவயிற்றின் பின்புறம் சென்று அடைதல் சாத்தியமான காரணங்கள் - பித்தப்பை கற்கள் அல்லது பித்தப்பை அழற்சி என்ன செய்ய வேண்டும் - எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளும்போது வலி அதிகரித்தால், மருத்துவரை அணுகவும். நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்க கூடாதாம்.. ஐசிஎம்ஆர் சொல்ல காரணம் என்ன?நான்-ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்க கூடாதாம்.. ஐசிஎம்ஆர் சொல்ல காரணம் என்ன? வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? தொப்புளுக்கு கீழே திடீர் வலி : எந்த இடத்தில் - தொப்புளின் இரண்டு பக்கத்திலும் மாறி மாறி வலி ஏற்படுவது சாத்தியமான காரணங்கள் - பெருங்குடல் சீர்குலைவு, சிறுநீரக குழாய் தொற்று அல்லது இடுப்பு அழற்சி நோய் என்ன செய்ய வேண்டும் - வலி மோசமாக இருந்தால், மருத்துவரை அழைக்கவும், பரிசோதனை செய்து, அவசர பிரிவிற்கு செல்வதை பரிந்துரைக்கவும். வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? திடீர் கூர்மையான வலி: எந்த இடத்தில் - இடுப்பிற்கு கீழ் பகுதியிலிருந்து விலா எலும்பு வரை சாத்தியமான காரணங்கள் - சிறுநீரக கற்கள், அல்லது இந்த அறிகுறியுடன் காய்ச்சல் இணைந்திருந்தால், சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை தொற்று என்ன செய்ய வேண்டும் - தண்ணீர் அதிகம் பருகவும். மருத்துவரை அழைக்கவும். சிறுநீரக கற்கள், சிகிச்சையினால் வெளியேறும் வாய்ப்புகள் அதிகம், அரிதான வழக்கில், அறுவை சிகிச்சை அவசியப்படும். வலியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும். வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? எரிச்சல் உணர்வு : எந்த இடத்தில் - அதிகமான உணவு சாப்பிட்டவுடன் , மார்பு எலும்பிற்கு சற்று கீழே ஒரு வித எரிச்சல் சாத்தியமான காரணங்கள் - நெஞ்செரிச்சல் என்ன செய்ய வேண்டும் - எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். அன்டசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும். அடுத்த சில வாரங்களுக்கு வலி நீடித்தால் , மருத்துவரை அணுகவும். வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? அடிவயிற்றில் திடீர் வலி எந்த இடத்தில் - இடது பக்க அடிவயிற்றின் கீழ் பகுதியில் வலியுடன் கூடிய காய்ச்சல், குமட்டல் அல்லது வாந்தி சாத்தியமான காரணங்கள் - பகுதி குடலிய அழற்சி அல்லது குரோன் நோய், பெருங்குடல் புண், என்ன செய்ய வேண்டும் - மருத்துவரை அணுகவும். கோலன்ஸ்கோபி செய்வதை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த நோய்க்கு நீண்ட நாள் சிகிச்சை அவசியம். வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? அடிவயிற்றில் திடீர் வலி மற்றும் இரத்தம் : எந்த இடத்தில் - வயிற்று வலியுடன் இணைந்து இரத்த வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம் சேர்ந்து வருவது, இரத்த வாந்தி சாத்தியமான காரணங்கள் - குடல் இயக்கத்தில் அடைப்பு, துளையிடப்பட்ட குடல் முளை, அல்லது குடலில் இரத்தப்போக்கு என்ன செய்ய வேண்டும் - இவை அனைத்தும் உள்ளுறுப்பு இரத்தபோக்கு என்பதால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்லவும். வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? தொடர்ந்து மிதமான வலி அல்லது அசௌகரியம் இருப்பது : எந்த இடத்தில் - வயிற்றில் மிதமான வலி இருப்பது, சில மாதங்கள் தொடர்ந்து வலி இருந்து கொண்டே இருப்பது, சில நேரம் வயஈற்றுப்போக்குடன் இணைந்து வலி இருப்பது, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், அல்லது வாய்வு போன்றவை உண்டாவது. சாத்தியமான காரணங்கள் - லாக்டோஸ் சகிப்புத்தன்மை இன்மை , எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, புண்கள், உணவு சகிப்புத்தன்மை இன்மை , கிரோன் நோய், பெருங்குடல் அழற்சி அல்லது உடற்குழி நோய் போன்ற ஒரு நாள்பட்ட வியாதி என்ன செய்ய வேண்டும் - மருத்துவரை அணுகவும், அவர் உங்களுக்கு இரைப்பை குடை இயல் மருத்துவரை பரிந்துரைக்கலாம். வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன மாதிரி பிரச்னைகள் வரும்? வயது முதிர்ந்தவர்களுக்கு அடிவயிற்றில் திடீர் வலி : எந்த இடத்தில் - அதிகம் புகை பிடிக்கும் அல்லது உயர் இரத்த அழுத்தம் கொண்ட வயது முதிர்தவர்களுக்கு அடிவயிற்றில் திடீர் வலி உண்டாவது, இதனுடன் சேர்ந்து லேசான மயக்கம் சாத்தியமான காரணங்கள் - அடிவயிற்று குடல் அழற்சி என்ன செய்ய வேண்டும் - பெருந்தமனியில் இரத்தப்போக்கு உண்டாகலாம், உடனடியாக மருத்துவமனையின் அவசர பிரிவிற்கு செல்லுங்கள்.