Thursday, 24 October 2013

Finally Good News For Diabetes!!!

A woman (65) was diabetic for the last 20+ years
and
was taking insulin
twice a day.
She used the enclosed homemade medicine for a fortnight and
now she is absolutely free of diabetes and taking all her food as normal
including sweets.

The doctors have advised her to stop insulin and any other blood sugar controlling drugs.
I request you all please circulate the email below to as many people as you
can and let them take maximum benefit from it.

AS RECEIVED :
DR. TONY ALMEIDA
( Bombay Kidney Speciality expert )
made the extensive experiments with perseverance and patience and discovered a
successful treatment for diabetes.
Now a days a lot of people, old men &
women in particular suffer a lot due to Diabetes.

Ingredients:
1 - Wheat 100 gm
2 - Gum(of tree) (gondh) 100 gm
3 - Barley 100 gm
4 - Black Seeds (kalunji) 100 gm

Method of Preparation :
Put all the above ingredients in 5 cups of water.
Boil it for 10 minutes and put off the fire.
Allow it to cool down by itself.
When it has become cold, filter out the
seeds and preserve water in a glass jug or bottle.

How to use it?
Take one small cup of this water every day early morning when your stomach is empty.
Continue this for 7 days.
Next week repeat the same but on alternate days. With these 2 weeks of
treatment you will wonder to see that you have become normal and can eat
normal food without problem.

Note:
A request is to spread this to as many as possible so that others can
also take benefit out of it.

SINCE THESE ARE ALL NATURAL INGREDIENTS,
TAKING THEM IS NOT HARMFUL.
SO THOSE WHO ARE SCEPTICAL ABOUT THIS TREATMENT
MAY STILL TRY IT WITHOUT ANY HARM.
This is working.

Disclaimer :
This article is not a substitute to medical treatment. Consult your doctor before starting any health procedure

Saturday, 19 October 2013

பயனுள்ள மருத்துவ டிப்ஸ்…இய‌ற்கை வைத்தியம்:-!!!



பயனுள்ள மருத்துவ டிப்ஸ்…இய‌ற்கை வைத்தியம்:-.

* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு     தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

Thursday, 17 October 2013

Accupoints for relief!!!

To relieve Pain through Accupressure follow this Video

வை பை கண்காணிப்பு மென்பொருள்!!!

வை பை கண்காணிப்பு மென்பொருள்

இன்றைய சூழலில் கணினி இல்லாத வீடு கிடையாது. அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது. அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும் கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்வதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர். அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல அருகில்
உள்ளவர்கள் நுழைந்து உங்கள் கணக்கில் பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள்.


இதனை சமாளிக்க உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address), எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர் என்றும் தெரிந்து கொள்ள முடியும்
டவுண்லோடு செய்ய
http://www.nirsoft.net/utils/wnetwatcher.zip


விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!!!

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!





நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் -காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.

தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.

சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!

தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, டென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.

மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!

மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும்.

காது நன்கு கேட்க!

காதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!

மனம் மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா? அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.

இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!

இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!

உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.

கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!

நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.

காய்ச்சல் குணமாக லிங் முத்திரை!

இரண்டு உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக் கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங்( ling ) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.

நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரை

நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு(apan vayu) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.

மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....

வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.

இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை

இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான( vyana ) முத்திரை என்று இதற்குப் பெயர்.

எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.

Monday, 14 October 2013

வேகமாக தகவல்களை காப்பி செய்ய ஒரு மென்பொருள்!!!



உங்களது தகவல்களை மிக வேகமாக Copy செய்யக்கூடிய மென்பொருளை  உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். WinMend File Copy எனும் மென்பொருள் மூலம் நாம் வேகமாக Copy செய்துகொள்ள முடியும். இந்த மென்பொருள் மூலம் ஓரிரு செக்கன்களில் 10MB File ஐ Copy செய்ய முடியும். இம்மென்பொருள்  வேலைகளை துரிதப்படுத்தக் கூடியதாகவும் அமையும். சில நேரங்களில் நாம் அவசரத் தேவையின்போது விரைவில் Copy செய்வதற்கும் இம்மென்பொருள் உதவுகிறது..


மென்பொருளைத் தரவிறக்க கீழே உள்ள Link ஐ அழுத்துங்கள்..

Sunday, 13 October 2013

ஆடியோ கோப்புகளை, நீங்கள் விரும்பும் வண்ண‍ம் எடிட் செய்து கேட்க உதவும் மென்பொருள்!!!

பல மென்பொருட்கள் இலவசமாக ஆடியோ கோப்புக்களை எடிட் செய்ய‍ கிடைத்தாலும் அதிலும்  சில வகை மென்பொருட்கள் மட்டுமே சிறந்த சேவைகளை தருகிறது.  
அவற்றில் ஒன்றுதான் இந்த   bpminus.comமென்பொருள். இது இலவ சமாக கிடைக்கிறது. அந்த மென் பொருளின் உதவியுடன் பாடலை எடிட் (Audio Edit) செய்யலாம். மேலும் Mp3, Wave மற்றும் பல்வேறு ஃபார்மட்டில் அமைந்துள்ள ஆடியோ கோப்புகளுக்கு துணை புரியும்  வண்ணம் இந்த வகையான‌ மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது நீங்கள் விரும்பும் பாடலின் தரம், ஒலியின் அளவு, ஒலி யின் வேகம் மற்றும் பாடலில் வரும் ஏற்ற இறக்கங்கள் என அனைத்துமே இந்த மென்பொரு ளின் உதவி கொண்டு, செய்து முடிக்க‍லாம்.
ஒரு பாடலின்  வேகம் மற்றும் பாடலுக்கு இசையை சேர்ப்பது என அனைத்தும் செய்யலாம்.  இசைக்கற்பவர்களுக்கு கூட அவர்கள், ஒலியின் தரத்தை துல்லியமாக கவனித்து, அவர்களது இசைத் திறனை வளர்க்க‍ உதவுகிறது.
அந்த இலவச மென்பொருள் http://bpminus.com  (சொடுக்குக•)

ஒரே கிளிக்கில் அணைத்து கூகுள் தேவைகளையும் உபயோகிப்பது எப்படி!!!


கூகுள் பல பயனுள்ள சேவைகளை பயனாளர்களுக்கு வழங்கி வருகின்றது. பிளாக்கர், ஜிமெயில், யூடியுப், பீட்பர்னர் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் ஓபன் செய்ய வேண்டும். இதற்கு பதில் ஒரே கிளிக்கில் கூகுளின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்த முடியும்.


இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும். கூகுளின் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை.

நீட்சியின் பயன்கள்:

1. ஒவ்வொரு முறையும் URL கொடுத்து தளத்தை ஓபன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, அடிக்கடி உபயோகிக்கும் கூகுள் சேவைகளில் முதலில் வைத்து கொண்டும் ஒரே கிளிக்கில் அந்த தளத்திற்கு சென்று விடலாம்.

2. உங்களுக்கு எத்தனை கூகுள் சேவைகள் தெரிய வேண்டும் என்பதை நீங்களே தெரிவு செய்து கொள்ளலாம்.

3. எந்த இணையத்தளத்தின் இணைய பக்கத்தையும் ஜிமெயில் மற்றும் பிளாக்கரில் share செய்யும் வசதி.

4. கூகுள் சேவைகளை icon மட்டும் உங்களுக்கு தெரியும் படி தெரிவு செய்து கொள்ளலாம்.

5. ஜிமெயில் மற்றும் ரீடர்களில் இன்னும் படிக்காத பதிவுகளின் எண்ணிக்கையை காட்டுவது இதன் கூடுதல் சிறப்பு.


உபயோகிக்கும் முறை:

இந்த Terminal for Google நீட்சியை தரவிறக்கம் செய்து குரோம் உலாவியில் நிறுவிய பிறகு குரோமில் தோன்றும் அந்த ஐகானை கிளிக் செய்தால் கூகுள் சேவைகள் வரும்.


தோன்றும் சேவைகளில் இது வேண்டாம் குறிப்பிட்ட சேவைகள் மட்டும் தெரிந்தால் போதும் என்று எண்ணினால் அங்கு உள்ள Option Page என்பதை கிளிக் செய்யுங்கள். 



அதன் பின் தோன்றும் விண்டோவில் Services என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் Enabled Services என்பதில் உள்ள சேவைகள் நீட்சியை கிளிக் செய்தால் வரும், Disabled Servicesஎன்பதில் உள்ள சேவைகள் உங்களுக்கு தெரியாது. இதில் உங்கள் விருப்பம் சேவைகளை நகர்த்தி கொள்ளலாம்.

இனி அனைத்து சேவைகளின் URL ஞாபகம் வைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே கிளிக்கில் எந்த சேவைக்கும் சுலபமாக செல்லலாம்.

தரவிறக்க சுட்டி



Monday, 7 October 2013

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்! ! ! !


1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப்பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.

பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD /DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/) போன்ற ஒரே ஒருinstant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன்துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும்.http://www.revouninstaller.com/பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.MyComputerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate WindowsWhen minimizing and maximizingஎன்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார்.அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும்நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர்(firewall), வைரசுஎதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.


Friday, 4 October 2013

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது, பார்ப்பது எப்படி?

இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும். 

ஆனால் நிறைய படங்கள் டொரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு மொழிப் படங்கள் எடுக்கும் போது சப்-டைட்டில் சேர்ந்து வருவதில்லை. இதற்கு தீர்வாக இணையத்தில்  சில தளங்கள் பல லட்சக்கணக்கான மொழிப்படங்களுக்கு சப்-டைட்டில்களை சேகரித்து
வைத்திருக்கிறார்கள்.

1. http://subscene.com/
2. http://www.opensubtitles.org/
3. http://www.moviesubtitles.org/

பொதுவாக சப்-டைட்டில் கோப்புகள் .SRT or .SUB என்ற பார்மேட்டில் முடியும். உங்களுக்குத் தேவையான சப்-டைட்டிலை டவுன்லோடு செய்து விட்டு அந்த படத்தின் பெயரை சப்-டைட்டிலுக்கும் Re-name செய்து விட்டால் படத்தைக் கிளிக் செய்து பார்க்கும் போது தானாக வந்து விடும்.

Example : Movie Name – Dookudu.avi , Sub-title Name – Dookudu.srt
 இல்லாவிட்டால் VLC மீடியா ப்ளேயரில் படத்தினைத் திறந்து விட்டு மெனுவில் Video -> Subtitles Track -> Open File என்று கிளிக் செய்து நீங்கள் டவுன்லோடு செய்த சப்-டைட்டிலைத் தேர்வு செய்தால் போதும். 
  

இதர சில இணையதளங்கள்

Tuesday, 1 October 2013

படிப்பதற்க்கும் ஆன்டிராய்ட் மொபைல் அப்ளிகேஷன்!!!

இன்று மாடர்ன் உலகத்தில் எல்லாமே தொழில்நுட்ப மயமாக்கப்பட்டு வருகின்றன. 
சிறு குழந்தைதளின் கல்விக்கு இன்று கம்பியூட்டரின் தேவை நிறைய உள்ளன. 
ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களிலும் இது போன்ற பயன்கள். 
இன்று நிறைய அப்ளிகேஷன்கள் ஸமார்ட்போன்களில் பயன்படும் வகையில் வெளிவரத் தொடங்கிவிட்டன. 
இப்பொழுது புதிதாக கல்வி சம்மந்தபட்ட ஆன்டிராய்ட் ஆப்ளிகேஷன் ஒன்று வெளிவந்துள்ளது. NCERT(National Council of Educational Research and Training)என்று அழைக்கப்படும்
இந்த அமைப்பின் கீழ் வரும் சம்மந்தபட்ட புத்தகங்களை நீங்கள் இந்த அப்ளிகேஷனை வைத்து ஆன்டிராய்ட் மொபைலிலே படிக்கலாம். 
என்சிஆர்டி அமைப்பின் கீழ் வரும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் இதில் உள்ளன. 
இந்த அப்ளிகேஷனின் படங்கள் மற்றும் டவுன்லோட் செய்யும் லிங்கை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

http://tamil.gizbot.com